Friday, June 11, 2010

ஐயா!



இது சரத்குமார் நடித்த படத்தின் விமர்சனம் இல்லிங்க ஐயா டாக்டர் ராமதாஸ்
அவர்களை பற்றிய விமர்சனம்.
மற்ற அரசியல்வாதிகளை போலல்லாமல் வேறுபட்டு இருப்பார் என்றும் மற்றகட்சிகளை போலல்லாமல் அவருடய கட்சி திடமான கொள்கையுடயதாக இருக்கும் என்றும் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது அனால் அவரது தொடர் நடவடிக்கை அந்த எண்னத்தை குளிதோண்டி புதைக்கசெய்தது.
மற்ற அர‌சிய‌ல்வாதிக‌ளைபோல‌த்தான் நானும் என்ப‌தை அவ‌ர் செய‌ல்மூலம் நிருபித்தார்.

கொள்கைக்காக‌ கூட்ட‌னி அமைப்பார் என்று ந‌ம்பினோம் சீட்டுக்காக‌ அணி மாறி மாறி த‌ன‌து நிலையை மேலும் தாழ்த்திக்கொண்டார்,கடந்த பாரளுமன்ற தேர்தல் பிர‌ச்சாரத்தின் போது ஜெய‌லலிதாவால்தான் இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ளுக்கு சரியான தீர்வுகாண‌முடியும் என்று கூறி ம‌க்க‌ளை ம‌டய‌ர்க‌ளாக்கும் முய‌ற்சியில் தோல்விக‌ண்டார், அந்த‌தோல்வியை ம‌ரைப்ப‌த‌ற்கு வாக்குப்ப‌திவு இய‌ந்திர‌த்தில் கோளாரு என்று ப‌டம்காட்டினார்.
பென்னாக‌ர‌ம் இடைத்தேர்த‌லில் த‌னது கட்சிக்கு இரண்டாம் இடம் கிடைத்தவுடன் வாக்குப்ப‌திவு இய‌ந்திர‌த்தில் கோளாரு இல்லை என்று த‌ன‌து மவுன‌த்தின் மூல‌ம் சான்றிதல் வ‌ழ‌ங்கினார். இவ‌ர் நேர்மையாளராக‌ இருந்தால் வாக்குப்ப‌திவு இய‌ந்திர‌த்தில் கோளாரு கார‌ண‌மாக‌த்தான் எங்க‌ள் கட்ச்சி வெற்றிவாய்ப்பை இழ‌ந்த‌து என்று கூறி இருக்க‌வேண்டும் அல்ல‌து வாக்குப்ப‌திவு இய‌ந்திர‌த்தில் கோளாரு கார‌ண‌மாக‌த்தான் எங்க‌ள் க‌ட்ச்சிக்கு அதிக‌வாக்கு கிடைத்த‌து இல்ல‌யேன்றால் நாங்க‌ள் மூன்றாம் இட‌த்திற்கு த‌ள்ள‌ப்ப‌ட்டிருப்போம் என்று கூறி வாக்குப்ப‌திவு இய‌ந்திர‌த்தில் முறை கேடு ந‌ட‌க்க‌வ‌ய்ப்புண்டு என்ற‌ த‌ன‌து நிலையை உருதிப‌டுத்தி இருக்கவேண்டும்.

அர‌சிய‌ல்வாதிக‌ளிட‌ம் இதையெல்லாம் எதிர்ப‌ர்க்க‌க்கூட‌து மேடைக்கு ஏற்ற‌வாறு வேஷ‌ம் மாருப‌வ‌ர்க‌ள்.வாழ்க‌,ஒழிக‌ கோச‌மெல்லாம் கூட்ட‌னியை பொருத்தேயன்றி கொள்கை பொருத்து இல்லை. அர‌சிய‌ல்வாதிக‌ளிட‌முள்ள‌ ஒரேக்கொள்கை ச‌ந்த‌ர்ப்ப‌வாதம் என்ப‌து மட்டுமே.

இப்போது தி.மு.காவோடு கூட்டனி முய‌ற்சி வாழ்க‌ ச‌ந்தர்ப்பவாதாம்.

வ‌ரும் ச‌ட்ட‌ம‌ன்ற‌த்தேர்த‌லில் அ.தி.மு.காவை ப‌டுதோல்வி அட‌யச்செய்துவிட்டால் அக்க‌ட்ச்சி ட்ர‌சுஇல்லா தி.மு.காவாக‌ ஆகிவிடும் என்று க‌ருனாநிதி க‌ண‌க்கு போடுகிறார், அத‌ற்கு தி.மு.காவோடு மீண்டும் கூட்ட‌னி அமைப்ப‌த‌ன் மூல‌ம் பிள்ளையார்சுழி போட‌ முயல்கிறார் ஐயா டாக்டர் ராமதாஸ்.அதிகாமாக சீட்டு கேட்பதற்கு இதுவே தக்கதருனம் என்று ஐயா டாக்டர் ராமதாஸும் கணக்கு போடுகிறார்.
வாழ்க‌ ச‌ந்தர்ப்பவாதாம்.

2 comments:

  1. //மற்ற அர‌சிய‌ல்வாதிக‌ளைபோல‌த்தான் நானும் என்ப‌தை அவ‌ர் செய‌ல்மூலம் நிருபித்தார்//

    ம‌ற்ற‌ அர‌சிய‌ல்வாதிக‌ளை விட‌ கேவ‌ல‌மாக‌.....

    சில‌ எழுத்துப்பிழைக‌ளை திருத்திடுங்க‌ அர‌சு..அப்ப‌டியே Word Verificationஐயும் எடுத்துடுங்க‌, க‌மெண்ட் போடுற‌துக்கு சுல‌ப‌மாயிருக்கும்

    ReplyDelete