Friday, December 10, 2010

புவனா ஒரு கேள்விக்குறி

புவனா ஒரு கேள்விக்குறி

ஏன்

முகூர்த்தத்திற்கு முன்பே

சாந்திமுகூர்த்தம் நடந்ததால்.

Friday, November 26, 2010

விதி

எனது தேசத்தில் இல்லை
என்று எதுவுமில்லை
நேர்மையான‌
அரசியல் வாதியை
தவிர!

Friday, June 11, 2010

ஐயா!



இது சரத்குமார் நடித்த படத்தின் விமர்சனம் இல்லிங்க ஐயா டாக்டர் ராமதாஸ்
அவர்களை பற்றிய விமர்சனம்.
மற்ற அரசியல்வாதிகளை போலல்லாமல் வேறுபட்டு இருப்பார் என்றும் மற்றகட்சிகளை போலல்லாமல் அவருடய கட்சி திடமான கொள்கையுடயதாக இருக்கும் என்றும் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது அனால் அவரது தொடர் நடவடிக்கை அந்த எண்னத்தை குளிதோண்டி புதைக்கசெய்தது.
மற்ற அர‌சிய‌ல்வாதிக‌ளைபோல‌த்தான் நானும் என்ப‌தை அவ‌ர் செய‌ல்மூலம் நிருபித்தார்.

கொள்கைக்காக‌ கூட்ட‌னி அமைப்பார் என்று ந‌ம்பினோம் சீட்டுக்காக‌ அணி மாறி மாறி த‌ன‌து நிலையை மேலும் தாழ்த்திக்கொண்டார்,கடந்த பாரளுமன்ற தேர்தல் பிர‌ச்சாரத்தின் போது ஜெய‌லலிதாவால்தான் இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ளுக்கு சரியான தீர்வுகாண‌முடியும் என்று கூறி ம‌க்க‌ளை ம‌டய‌ர்க‌ளாக்கும் முய‌ற்சியில் தோல்விக‌ண்டார், அந்த‌தோல்வியை ம‌ரைப்ப‌த‌ற்கு வாக்குப்ப‌திவு இய‌ந்திர‌த்தில் கோளாரு என்று ப‌டம்காட்டினார்.
பென்னாக‌ர‌ம் இடைத்தேர்த‌லில் த‌னது கட்சிக்கு இரண்டாம் இடம் கிடைத்தவுடன் வாக்குப்ப‌திவு இய‌ந்திர‌த்தில் கோளாரு இல்லை என்று த‌ன‌து மவுன‌த்தின் மூல‌ம் சான்றிதல் வ‌ழ‌ங்கினார். இவ‌ர் நேர்மையாளராக‌ இருந்தால் வாக்குப்ப‌திவு இய‌ந்திர‌த்தில் கோளாரு கார‌ண‌மாக‌த்தான் எங்க‌ள் கட்ச்சி வெற்றிவாய்ப்பை இழ‌ந்த‌து என்று கூறி இருக்க‌வேண்டும் அல்ல‌து வாக்குப்ப‌திவு இய‌ந்திர‌த்தில் கோளாரு கார‌ண‌மாக‌த்தான் எங்க‌ள் க‌ட்ச்சிக்கு அதிக‌வாக்கு கிடைத்த‌து இல்ல‌யேன்றால் நாங்க‌ள் மூன்றாம் இட‌த்திற்கு த‌ள்ள‌ப்ப‌ட்டிருப்போம் என்று கூறி வாக்குப்ப‌திவு இய‌ந்திர‌த்தில் முறை கேடு ந‌ட‌க்க‌வ‌ய்ப்புண்டு என்ற‌ த‌ன‌து நிலையை உருதிப‌டுத்தி இருக்கவேண்டும்.

அர‌சிய‌ல்வாதிக‌ளிட‌ம் இதையெல்லாம் எதிர்ப‌ர்க்க‌க்கூட‌து மேடைக்கு ஏற்ற‌வாறு வேஷ‌ம் மாருப‌வ‌ர்க‌ள்.வாழ்க‌,ஒழிக‌ கோச‌மெல்லாம் கூட்ட‌னியை பொருத்தேயன்றி கொள்கை பொருத்து இல்லை. அர‌சிய‌ல்வாதிக‌ளிட‌முள்ள‌ ஒரேக்கொள்கை ச‌ந்த‌ர்ப்ப‌வாதம் என்ப‌து மட்டுமே.

இப்போது தி.மு.காவோடு கூட்டனி முய‌ற்சி வாழ்க‌ ச‌ந்தர்ப்பவாதாம்.

வ‌ரும் ச‌ட்ட‌ம‌ன்ற‌த்தேர்த‌லில் அ.தி.மு.காவை ப‌டுதோல்வி அட‌யச்செய்துவிட்டால் அக்க‌ட்ச்சி ட்ர‌சுஇல்லா தி.மு.காவாக‌ ஆகிவிடும் என்று க‌ருனாநிதி க‌ண‌க்கு போடுகிறார், அத‌ற்கு தி.மு.காவோடு மீண்டும் கூட்ட‌னி அமைப்ப‌த‌ன் மூல‌ம் பிள்ளையார்சுழி போட‌ முயல்கிறார் ஐயா டாக்டர் ராமதாஸ்.அதிகாமாக சீட்டு கேட்பதற்கு இதுவே தக்கதருனம் என்று ஐயா டாக்டர் ராமதாஸும் கணக்கு போடுகிறார்.
வாழ்க‌ ச‌ந்தர்ப்பவாதாம்.

Thursday, June 10, 2010

என் கேள்விக்கு என்னபதில்


கேள்வி கேட்பதில் நம்மவர்களை யாரலும் மிஞ்முடியது அப்படி எடக்கு மடக்கா கேள்வி கேப்பானுவ. அப்படித்தான் நன்பர் ஒருவர் கேள்விகேட்டாரு கருப்பு கோழி கருப்பு கலர் முட்டையிட்டா வெள்ளை கோழி என்ன கலர் முட்டையிடும் என்று நான்சொன்னேன் வெள்ளை கோழி கருப்பு முட்டையிடும் என்று. எப்படி என்றார் நான் சொன்னேன் முட்டையின் கலர் கருப்பு அதனால் எந்த கலர் கோழி முட்டையிட்டாலும் கருப்பு முட்டைதான் போடும் என்று. அவருக்கு எனது பதில் திருப்தி அளிக்கவில்லை நானும் விடவில்லை,இப்போ வெள்ளை கோழி என்னகலர் முட்டையிடுகிரது என்றேன் வெள்ளை என்றார் கருப்பு கோழி என்னகலர் முட்டையிடுகிரது என்றேன் வெள்ளை என்றார்,முட்டையின் கலர் வெள்ளை அதனால் எந்த கலர் கோழி முட்டையிட்டாலும் வெள்ளை முட்டைதான் போடுகிரது அது போலத்தான்
முட்டையின் கலர் கருப்பு அதனால் எந்த கலர் கோழி முட்டையிட்டாலும் கருப்பு முட்டைதான் போடும்.எனது விளக்கம் அவருக்கு முழுமையான் திருப்தி அளிக்கவில்லை,உங்களுக்கு தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்களேன்.

Thursday, April 15, 2010

கருப்பு பணம்

மும்பை : 'இந்தியர்கள், சுவிஸ் வங்கியில் மறைத்து வைத்துள்ள பணத்தை இந்தியா கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வரப்பட்டால், அடுத்த 30 ஆண்டுகளுக்கு வரியில்லா பட்ஜெட் போடலாம்' என, ராஜ்யசபா உறுப்பினர் ராம் ஜெத்மலானி நேற்று தெரிவித்தார்.



நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: இந்தியா பணக்கார நாடு. ஆனால், அதன் ஊழல் தலைவர்களால், இந்தியா ஏழையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர்கள், நாட்டின் ஏழை மக்களிடம் இருந்து எடுத்து, சுவிஸ் வங்கியில், 67.50 லட்சம் கோடி ரூபாய் வரை பதுக்கி வைத்துள்ளனர். அரசு இந்த பணத்தை மீண்டும் இந்தியா கொண்டு வந்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.5 லட்சம் ரூபாய் கிடைப்பதோடு, அடுத்த 30 ஆண்டுகளுக்கு வரியில்லாத பட்ஜெட் போடலாம். புனேயைச் சேர்ந்த தொழிலதிபர் ஹசன் அலி, சுவிஸ் வங்கிக் கணக்கில், 36 ஆயிரத்து 900 கோடி ரூபாய் பதுக்கி வைத்திருந்தார். அவரிடம் இருந்து அரசு, 37 கோடி ரூபாயை வரியாக வசூலித்தது. 2002ம் ஆண்டு, அரசு வரி ஏய்ப்பு செய்து பணத்தை வெளிநாடுகளில் சேமிக்கும் செயலைத் தடுக்க சட்டத்தை உருவாக்கியது. ஆனால், அதில் உள்ள விதிமுறைகள் எதையும், 2005ம் ஆண்டு வரை அரசு செயல்படுத்தவில்லை.



வருமான வரி அதிகாரிகள், ஹசன் அலியின் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களை, தருமாறு சுவிஸ் வங்கியிடம் கேட்டனர். அப்போது, சுவிஸ் வங்கியினர் அளித்த பதிலில், 'பணமோசடி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாங்கள் அனைத்து தகவல்களையும் வழங்க தயார்' என்றது. ஆனால், அதன் பின், 2007ம் ஆண்டு வரை, சுவிஸ் வங்கி அதிகாரிகளுடன் எவ்வித கடித தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தை இந்தியா கொண்டு வர அரசுக்கு விருப்பம் இல்லாமல் இருக்க வேண்டும் அல்லது அதுபற்றி உண்மை தெரியாமல் இருக்க வேண்டும். தவிரவும், குஜராத்தில் நடந்த கலவரங்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்கிறோம். ஆனால், சுவிஸ் வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் குறித்து விசாரிக்க ஏன் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட வில்லை. இந்தப் பணம் பற்றி அறிய சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். ஆனால், அரசு இந்த விஷயத்தை ரகசியம் என்று கூறி தகவல் தர மறுக்கிறது. அப்படி ரகசியம் என்று கூறுவது மோசடியாகும்.இவ்வாறு ராம் ஜெத்மலானி கூறினார்
ந‌ன்றி : தின‌ம‌ல‌ர்

Wednesday, April 14, 2010

நினைத்தாலே இனிக்கும்

































அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்ளும்
உலகத் தமிழர் உரிமை மாகநாடு



இடம்:மெரினா கடற்கரை சென்னை

தேதி:??/??/????

தலமை:


கலைஞர் மு.கருணாநிதி

சிறப்புரை:


புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா

டாக்டர் ரமதாஸ்

வை.கோபால்சாமி

கே.வி.தங்கபாலு

புரட்சி கலைஞர் விஜயகாந்

தொள்.திருமாவளவன்

தா.பாண்டியன்



அனைவரும் வருக‌.


இவன்
தமிழர் கூட்டமைப்பு

மனிதன்

யாசிக்க யோசிக்கிறேன்
நேசிக்க யாசிக்கிறேன்
அஞ்சுவதை வெருக்கும் நான்
வஞ்சிப்பதற்கு அஞ்சுகிறேன்
எளியோரை இகழ்வதுமில்லை
வலியோரை புகழ்வதுமில்லை
தேசத்தை நேசிக்கிறேன்
மனித நேயத்தை சுவாசிக்கிறேன்.

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...