Thursday, April 15, 2010

கருப்பு பணம்

மும்பை : 'இந்தியர்கள், சுவிஸ் வங்கியில் மறைத்து வைத்துள்ள பணத்தை இந்தியா கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வரப்பட்டால், அடுத்த 30 ஆண்டுகளுக்கு வரியில்லா பட்ஜெட் போடலாம்' என, ராஜ்யசபா உறுப்பினர் ராம் ஜெத்மலானி நேற்று தெரிவித்தார்.



நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: இந்தியா பணக்கார நாடு. ஆனால், அதன் ஊழல் தலைவர்களால், இந்தியா ஏழையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர்கள், நாட்டின் ஏழை மக்களிடம் இருந்து எடுத்து, சுவிஸ் வங்கியில், 67.50 லட்சம் கோடி ரூபாய் வரை பதுக்கி வைத்துள்ளனர். அரசு இந்த பணத்தை மீண்டும் இந்தியா கொண்டு வந்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.5 லட்சம் ரூபாய் கிடைப்பதோடு, அடுத்த 30 ஆண்டுகளுக்கு வரியில்லாத பட்ஜெட் போடலாம். புனேயைச் சேர்ந்த தொழிலதிபர் ஹசன் அலி, சுவிஸ் வங்கிக் கணக்கில், 36 ஆயிரத்து 900 கோடி ரூபாய் பதுக்கி வைத்திருந்தார். அவரிடம் இருந்து அரசு, 37 கோடி ரூபாயை வரியாக வசூலித்தது. 2002ம் ஆண்டு, அரசு வரி ஏய்ப்பு செய்து பணத்தை வெளிநாடுகளில் சேமிக்கும் செயலைத் தடுக்க சட்டத்தை உருவாக்கியது. ஆனால், அதில் உள்ள விதிமுறைகள் எதையும், 2005ம் ஆண்டு வரை அரசு செயல்படுத்தவில்லை.



வருமான வரி அதிகாரிகள், ஹசன் அலியின் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களை, தருமாறு சுவிஸ் வங்கியிடம் கேட்டனர். அப்போது, சுவிஸ் வங்கியினர் அளித்த பதிலில், 'பணமோசடி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாங்கள் அனைத்து தகவல்களையும் வழங்க தயார்' என்றது. ஆனால், அதன் பின், 2007ம் ஆண்டு வரை, சுவிஸ் வங்கி அதிகாரிகளுடன் எவ்வித கடித தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தை இந்தியா கொண்டு வர அரசுக்கு விருப்பம் இல்லாமல் இருக்க வேண்டும் அல்லது அதுபற்றி உண்மை தெரியாமல் இருக்க வேண்டும். தவிரவும், குஜராத்தில் நடந்த கலவரங்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்கிறோம். ஆனால், சுவிஸ் வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் குறித்து விசாரிக்க ஏன் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட வில்லை. இந்தப் பணம் பற்றி அறிய சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். ஆனால், அரசு இந்த விஷயத்தை ரகசியம் என்று கூறி தகவல் தர மறுக்கிறது. அப்படி ரகசியம் என்று கூறுவது மோசடியாகும்.இவ்வாறு ராம் ஜெத்மலானி கூறினார்
ந‌ன்றி : தின‌ம‌ல‌ர்

Wednesday, April 14, 2010

நினைத்தாலே இனிக்கும்

































அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்ளும்
உலகத் தமிழர் உரிமை மாகநாடு



இடம்:மெரினா கடற்கரை சென்னை

தேதி:??/??/????

தலமை:


கலைஞர் மு.கருணாநிதி

சிறப்புரை:


புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா

டாக்டர் ரமதாஸ்

வை.கோபால்சாமி

கே.வி.தங்கபாலு

புரட்சி கலைஞர் விஜயகாந்

தொள்.திருமாவளவன்

தா.பாண்டியன்



அனைவரும் வருக‌.


இவன்
தமிழர் கூட்டமைப்பு

மனிதன்

யாசிக்க யோசிக்கிறேன்
நேசிக்க யாசிக்கிறேன்
அஞ்சுவதை வெருக்கும் நான்
வஞ்சிப்பதற்கு அஞ்சுகிறேன்
எளியோரை இகழ்வதுமில்லை
வலியோரை புகழ்வதுமில்லை
தேசத்தை நேசிக்கிறேன்
மனித நேயத்தை சுவாசிக்கிறேன்.

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...